பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல-(2)
நீர் பேசினால் எங்கள் வாழ்வு மாறும்
நீர் பேசினால் எங்கள் துக்கம் மாறும்
நீர் பேசினால் உயிர்
அடைவோம் ஐயா
1.கைவிட்ட நேரத்தில்
வனாந்திர பாதையில்
தனிமையின் வேளையில்
நீர் என்னைக் காண்கிற
தேவனே-(2)
என்னோடு பேசுவீர்
என் வாழ்வை மாற்றுவீர்
வனாந்திரம் செழித்தோங்குமே
- நீர் பேசினால்
2.உருக்கமான இரக்கத்தால்
நீர் என்னை இழுத்தீரே
கிருபையின் தேவனே
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே
உமது காருண்யம்
பெரியவனாய் மாற்றிடுமே
உம்மாலே உயர்ந்திடுவேன்-(2)
நீர் பேசினால்.....
3.நித்திய கிருபையினால்
இரக்கம் செய்தீரே
தலைமுறை தலைமுறையாய்
என்றும் தொழுவோம்-(2)
நித்திய புகழ்ச்சியே
நிரந்தமானவரே
என்றென்றும் தொழுதிடுவோம்..
நீர் பேசினால்......