En Mugam Vetkappattu Lyrics - என் முகம் வெட்கப்பட்டு

என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்ல
ஒரு நாளும் தலைகுனிவு எனக்கு இல்ல

இல்ல இல்ல தோல்வி இல்ல
இல்ல இல்ல கலக்கம் இல்ல

நீதிமானை சோதித்து அறிகிறீர்
என்றும் பொன்னாக ஜொலித்திட செய்கிறீர்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை

என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர்
எனக்காக யாவையும் செய்கிறீர்
உம் முகம் பார்ப்பதினால்
நீர் எனக்குள் இருப்பதினால்

சாத்தானின் தந்திரங்கள் அறிந்தவன்
சர்வ வல்லவரின் ஆயுதத்தை அணிந்தவன்
கிறிஸ்துவுக்குள் ஒவ்வொரு நாளும்
ஜெயமாக வாழ்ந்திடுவேன்